5 நாட்களில் ரூ.200 கோடி வசூலை அள்ளிய எம்புரான்...!

மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படம் 5 நாட்களில் ரூ.200 கோடி வசூலை குவித்துள்ளது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியானது ’எம்புரான். கடந்த 2019- ஆம் ஆண்டு வெளியான படம் ’லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் இதுவாகும். எம்புரான்’ திரைப்படம் உலகளவில் வெளியான 2 நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. எம்புரான் படத்தின் வில்லன் காதாபாத்திற்கு பால்ராஜ் படேல் என்கிற பாபா பஜ்ரங்கி என்று பெயரிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
The OVERLORD shatters the 200 crore barrier in style! EMPURAAN makes history!#L2E #Empuraan pic.twitter.com/9xQb2CWiV5
— Mohanlal (@Mohanlal) March 31, 2025
மேலும் இப்படத்தில் குஜராத் கலவரங்களை குறித்து காட்சிகள் இருப்பதால் இதை இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் மோகன்லால் மன்னிப்பு கேட்டு பதிவிட்டு இருந்தார். இதனால் படத்தின் இருந்து 3 நிமிட காட்சியை படக்குழு தற்பொழுது நீக்கியுள்ளது. இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் உலகளவில் 200 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.