மலையாள சினிமாவில் புதிய சாதனை படைத்த எம்புரான்... ரூ.325 கோடி வசூல்...!

empuran

மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் திரைப்படம் ரூ.325 கோடி வசூலை பெற்று  மலையாள சினிமாவில் புதிய சாதனை படைத்துள்ளது.  

தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய திரையுலகில் வெளியான சில படங்கள் 1000 கோடி வசூலைக் கடந்து சாதனை புரிந்துள்ளன. தமிழ் சினிமாவில் 1000 கோடி வசூல் என்பது இன்னும் கனவாகவே உள்ளது. விரைவில் அந்த சாதனையையும் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மலையாள சினிமாவில் 100 கோடி வசூல் என்பதே கனவாக இருந்த நிலையில், மோகன்லால் நடிப்பில் வெளிவந்த 'புலி முருகன்' படம் 2016 100 கோடியை அள்ளியது. அதன்பின் “லூசிபர், 2018, ஆவேஷம், ஏஆர்எம், மார்கோ, பிரேமலு, த கோட் லைப்' ஆகிய படங்கள் 100 கோடி வசூலைப் பெற்றன.mohanlal

மலையாள சினிமாவின் முதல் 200 கோடி படம் என்ற வசூலை கடந்த வருடம் வெளிவந்த 'மஞ்சும்மேல் பாய்ஸ்' திரைப்படம் பெற்றது. 240 கோடி வசூலித்த, அந்த சாதனையை ஒரு வருடம் மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடிந்துள்ளது.


இந்நிலையில், மோகன்லால் நடித்த 'எல் 2 எம்புரான்' படம் தற்போது 325 கோடி வசூலைக் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 பிரிதிவிராஜ் இயக்கத்தில் மோகன்லால், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்டோர் நடித்த திரைப்படம்  'எல் 2 எம்புரான்'. ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம் மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

Share this story