மலையாளத்தில் உருவான முதல் பான் இந்தியா திரைபடம் எம்புரான் : நடிகர் விக்ரம் புகழாரம்...!

vikram

மலையாளத்தில் உருவான முதல் பான் இந்தியா திரைபடம் எம்புரான் என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். 

 
சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, நடிகை துஷாரா விஜயன் நடிப்பில் வீர தீர சூரன் படம் உருவாகியுள்ளது. தங்கலான் கொடுத்த வெற்றியால் விக்ரமின் வீர தீர சூரன் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் வெளியான 2 பாடல்கள், டீசர் கவனம் ஈர்த்துள்ளது. இப்படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகிறது. மேலும், படத்தின் டிரெய்லரும் ரசிகர்களை கவர்ந்தது. தற்போது இப்படத்தின் புரமோசன் பணி நடைபெற்று வருகிறது. அந்த விழாவில் விக்ரம் பேசுகையில்,



 
’மலையாளத்தில் சாதனை படைக்கும் முதல் பான் இந்திய திரைப்படமாக ’எல்2 எம்புரான்' இருக்கும் என நம்புகிறேன். விரதிரசூரனும் அதனுடன் திரைக்கு வருவது மகிழ்ச்சி. நடிகர் பிருத்விராஜ், தனுஷைபோல இயக்குனராக மாறி ”லூசிபர் கொடுத்தது அதிர்ச்சியாக இருந்தது’ என்றார். 
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் லூசிபர். பிருத்விராஜ் இயக்கிய முதல் படம் இதுவாகும். தற்போது இதன் 2-ம் பாகமாக எல்2 எம்புரான் உருவாகியுள்ளது. இப்படமும் வருகிற 27-ம் தேதி வெளியாகிறது குறிப்பிடத்தக்கது. 

Share this story