கவனம் ஈர்க்கும் 'லூசிஃபர்' படத்தின் 2ம் பாகமான 'எம்புரான்' பட டீசர்

’லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகம் எம்புரான் (Empuraan) படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது. லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
Welcome to the world of #L2E #EMPURAAN The 2nd instalment of the #LUCIFER franchise!
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) January 26, 2025
In theatres worldwide 27th March 2025!https://t.co/JiqeY9nsR4
Malayalam | Tamil | Hindi | Telugu | Kannada #March27 @mohanlal #muraligopy @antonypbvr @aashirvadcine @Subaskaran_A… pic.twitter.com/yOlZu3xLCf
மேலும் இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஜதின் ராம்தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், எம்புரான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேர்பை பெற்று வருகிறது. இப்படம், வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடா என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.