சொக்க வைக்கும் எமி ஜாக்சனின் ரீசன்ட் கிளிக்ஸ்.

photo

நடிகை எமி ஜாக்சன் ஸ்டைலிஷ்ஷான கருப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

photo

ஏ.எல் விஜய்யின் ‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். அதனாலேயே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு குவிய துவங்கியது. சூப்பர் ஸ்டாருடன் இணைந்து, ‘எந்திரன்2.0’, விஜய்யின் ‘தெறி’, தனுஷின் ‘தங்க மகன்’, விக்ரமின் ‘ஐ’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் தொழில் அதிபரான ஜார்ஜ் பனயோட்டோ என்பவருடன் வாழ்ந்து ஒரு ஆண் குழந்தைக்கு தாயானார். தொடர்ந்து அவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக பிரிந்தனர். தற்போது   பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வருகிறார். அவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுகிறார்.

இந்த நிலையில் தற்போது எமி மிகவும் ஸ்டைலிஷ்ஷான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் பார்க்கும் அனைவரையும் சொக்க வைக்கும் விதத்தில் உள்ளது.
 

Share this story