30 ஆண்டுகள் படுத்த படுக்கை-‘என் உயிர் தோழன்’ பாபு காலமானார்.

photo

‘என் உயிர் தோழன்’ படத்தின் மூலமாக சினிமாவுக்குள் அறிமுகனார் நடிகர் பாபு, 30 ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்த நிலையில் நேற்று காலமானார்.

photo

1990 ஆன் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் ‘என் உயிர் தோழன்’ , அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பாபு. படமும் நல்ல ரீச் ஆனது.  தொடர்ந்து ஒரே வருடத்தில் மூன்று படங்களில் நடித்து மக்கல் மத்தியில் நன்கு பரிச்சயமானர். கோலிவுட்டுக்கு சூப்பர் ஹீரோ கிடச்சாச்சு எப்படியும் இவர் முன்னணி நடிகராகிவிடுவார் என பலரும் எதிர்பார்த்தனர்.

photo

ஆனால் அவரது ஐந்தாவது படமான ‘மனசார வாழ்துங்களேன்’ படத்தில் சண்டைகாட்சி ஒன்றில் நடித்தபோது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் சிக்கி அவரது முதுகெலும்பு உடைந்தது. அந்த விபத்தில் அவரது உயிர் காக்கப்பட்டாலும் அவரது உடல்நிலை நிற்க கூட முடியாத வகையில் மோசமானது.  படுத்த படுக்கையிலேயே தனது வாழ்கையை கழித்த பாபு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். அதுவும் ஓராண்டு, ஈராண்டுகள் அல்ல 30 ஆண்டுகள். இந்த நிலையில் சமீபத்தில் மிகவும் உடல்நலன் பாதிக்கப்பட்டு நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பாபுவின் நெருங்கிய நண்பரான பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

Share this story