'டிராகன்' படத்தின் 'ஏன்டி விட்டு போன?' பாடல் அப்டேட்

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்' படத்தின் 'ஏன்டி விட்டு போன?' பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக டிராகன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர், விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Lovely Break-up song starring @pradeeponelife and @anupamahere in @leon_james Musical and @SilambarasanTR_ Vocal ! 💔🎶✨
— AGS Entertainment (@Ags_production) January 27, 2025
‘Yendi Vittu Pona’ From Tomorrow at 6PM! ⏳@pradeeponelife in & as #Dragon
A @Dir_Ashwath Araajagam 💥🧨
A @leon_james Musical 🎵#PradeepAshwathCombo… pic.twitter.com/tk2DljrBdI
இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ரைஸ் ஆப் தி டிராகன்' மற்றும் 'வழித்துணையே' பாடல்கள் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. 'டிராகன்' படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடிய 'ஏன்டி விட்டு போன?' என்ற பாடலின் புரோமோ நேற்று வெளியானது. இந்நிலையில், 'டிராகன்' படத்தின் 'ஏன்டி விட்டு போன?' பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.