தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ள அமலாக்கத் துறை...!

akash baskaran

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத் துறையினர் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.  

டாஸ்மாக்கில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் கடந்த மாதம் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக சில தினங்களுக்கு முன்பு சென்னை உட்பட தமிழகத்தில் மொத்தம் 12 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். akash


அந்த சோதனையில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடும் அடங்கும். டாஸ்மாக் முறைகேடு பணத்தில் இவர் நடத்தி வரும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ‘டான் பிக்சர்ஸ்’ நிறுவனம் படங்களை தயாரிக்கிறதா என்று அமலாக்கத்துறையினர் சந்தேகித்தனர். அதனால் அது குறித்து விளக்கமளிக்க ஆகாஷ் பாஸ்கரனை இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் அவர் இன்று ஆஜராகவில்லை. இதனை தொடர்ந்து ஆகாஷ் பாஸ்கரன் எங்கு இருக்கிறார் என்ற தகவலை அமலாக்கத்துறையினர் திரட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே அவர் மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story