காலேஜ் ஹாஸ்டல் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘எங்க ஹாஸ்டல்’ வெப் சீரிஸ் டிரைலர்.

photo

கல்லூரி வாழ்க்கையை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது, அந்த வகையில் தற்போது கல்லூரி வாழ்வின் ஹாஸ்டலை மையாமாக வைத்து ஒரு வெப் தொடர் உருவாகியுள்ளது. இந்த வெப் தொடரை சதீஷ் சந்திரசேகர் இயக்கியுள்ளார். இது பிரபல ஹாஸ்டல் டிராமாவான ஹாஸ்டல் டேஸின் தமிழ் ரீமேக்காக தயாராகியுள்ளது. தற்போது இந்த வெப் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.

photo

photo

இந்த தொடரில் சச்சின் நாச்சியப்பன், அவினாஷ் ரமேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், சரண்யா ரவிச்சந்திரன், டிராவிட் செல்வம் என பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் தொடரின் கதை, கல்லூரி வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களைக் கடந்து செல்லும் 6 மாணவர்களை மையமாகக் கொண்டும், ஒவ்வொரு மாணவருக்கும் தொடர்புபடுத்தக்கூடியதாக இருக்கும். 'எங்க ஹாஸ்டல்' வெப் சீரிஸ் நகைச்சுவை, நட்பு, காதல், வாழ்க்கை என முழுமையான தொகுப்பாக அமைந்துள்ளது.

photo

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் ஜனவரி 27ஆம் தேதி இந்த வெப் தொடர் எட்டு சீசன்களாக ஒளிபரப்பாக இருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள டிரைலர் ராக்கிங், டிப்பார்ட்மெண்ட் மோதல், காதல் என அனைத்தும் கலந்த கலவையாக தயாராகியுள்ளது. இது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Share this story