முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் அசத்தியுள்ள கருணாஸ்-"என்ன விலை" பட விமர்சனம்

Ken Karunas shares an update on his father’s ailment

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில், பக்தர்கள் காணிக்கையாக விட்டுவிட்டு செல்லும் நாணயங்களை சேகரித்து பிழைப்பு நடத்தும் மீனவர், கருணாஸ். மனைவி விஜயலட்சுமி, ஒரு மகன், மகள் மற்றும் தங்கை ஷாஷா சிவகுமாருடன் குடிசையில் எளிய வாழ்க்கை நடத்துகிறார். ஒருநாள் அவருக்கு கிடைக்கும் பழமையான தங்க ஆபரணம், அவரது வாழ்க்கையையே திசை மாற்றுகிறது. பூமிக்கு கீழே கிடைக்கும் பொருள் அரசாங்கத்துக்கு சொந்தம் என்ற நல்ல எண்ணத்துடன் அந்த ஆபரணத்தை காவல்துறையிடம் ஒப்படைக்கிறார். ஆனால், அவர் மீதே காவல்துறை திருட்டு குற்றம் சுமத்தி ஜெயில், கோர்ட் என்று அலையவிடுகிறது. இந்த வழக்கை எதிர்த்து வாதாடும் நிமிஷா சஜயன், ஒருகட்டத்தில் தோற்றுவிடுகிறார். கருணாஸின் நேர்மை காப்பாற்றப்பட்டதா? அரசாங்கம் எடுக்கும் அதிரடி முடிவு என்ன என்பது மீதி கதை.

முற்றிலும் மாறுபட்ட தவசிமுத்து கேரக்டரில் அசத்தியுள்ள கருணாஸ், ‘ஜெயிலுக்கு போக பயமாக இருக்கிறது’ என்று கதறும் காட்சியில் கல்மனமும் கரையும். அவரது மனைவி விஜயலட்சுமி வீரமணி, தங்கை ஷாஷா சிவகுமார், மகன் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். படத்தின் மிகப்பெரிய பலம், வழக்கறிஞராக வந்து வாதாடி கதிகலங்க வைத்திருக்கும் நிமிஷா சஜயன். அவரது மலையாளம் கலந்த தமிழ் டப்பிங் நேர்த்தியாக இருக்கிறது.

Share this story