'காதலிக்க நேரமில்லை' படத்தின் 'என்னை இழுக்காதடி' பாடல் ரிலீஸ்...!

kadhalika neramilai

ஜெயம் ரவி நடித்துள்ள காதலிக்க நேரமில்லை படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்  'என்னை இழுக்காதடி'  பாடல்  வெளியாகி உள்ளது. 'பிரதர்' படத்தை தொடர்ந்து ஜெயம்ரவி நடிப்பில் வெளியாக உள்ள படம் 'காதலிக்க நேரமில்லை'. இதில், நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். "வணக்கம் சென்னை" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி இப்படத்தை இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் அடுத்த மாதம் 20-ந் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், 'காதலிக்க நேரமில்லை' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்  'என்னை இழுக்காதடி'  வெளியாகி உள்ளது.  

Share this story