‘நெஞ்சுவலி அப்போ அப்போ வருது……’-இணையத்தில் வைரலாகும் மாரிமுத்துவின் வீடியோ.

photo

நடிகர் மாரிமுத்துவின் மரணம் திரைத்துறையில் ஈடுசெய்யமுடியாத இழப்பாக உள்ளது. பலரும் அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர் சீரியலில் ‘ நெஞ்சுவலி அப்போ அப்போ…’ வருது என கதிருடன் பேசிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

photo

‘அப்போ அப்போ நெஞ்சுவலி வருது, ஏதோ கெட்டது நடக்கப்போகுதுன்னு தோணுது” என சீரியலில் தம்பி கதிருடன் காரில் அமர்ந்தவாரு ஆதிகுணசேகரன் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் சீரியலில் அவர் பேசியது நிஜ வாழ்வில் அவருக்கு நடந்துள்ளதாக கூறி வருத்தப்பட்டு வருகின்றனர்.


 

உதவி இயக்குநராக இருந்து பின்னர் ‘கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ ஆகிய படங்களை இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்தார் மாரிமுத்து. இயக்கம் மட்டுமல்லாமல் நடிப்பிலும் அசத்தினார். வாலி, பரியேறும் பெருமாள், ஜெயிலர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து அசத்திய மாரிமுத்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் தான். இந்த நிலையில் அந்த தொடரில் அவர் பேசிய வசனம் தற்போது வைரலாகி வருகிறது.

Share this story