"ஆயிரம் கோடி செலவு செய்தாலும் மெய்யழகன் போல் படம் வராது..." நடிகர் நானி

"ரூ.1000 செலவு செய்தாலும் மெய்யழகன் போல் படம் வராது என நடிகர் நானி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானி நடித்துள்ள ஹிட் 3 திரைப்படம் வருகிற 1-ம் திரையரங்குகளில் வெளியாகிறது. சைலேஷ் கோலானு இயக்கி இருக்கும் இப்படத்தின் புரமோஷன் பணி சென்னையில் நடைபெற்றது.
"Forget in Tamil Cinema, one of my most favourite film in the entire decade was #Meiyazhagan🫰♥️. You can spend 1000s of crores, but this film is magical & classic🛐. I spoke to #Karthi also. Whenever I think of Meiyazhagan, I will become happy🥰"
— AmuthaBharathi (@CinemaWithAB) April 26, 2025
- #Nanipic.twitter.com/sskSU5fH45
அதில் பேசிய நானி, "தமிழ் சினிமா என்பதை மறந்துவிடுங்கள். கடந்த பத்தாண்டுகளில் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று 'மெய்யழகன்'. ரூ.1,000 கோடி செலவு செய்து படம் எடுக்கலாம். ஆனால் 'மெய்யழகன்' மிகவும் ஸ்பெஷல். அந்தப் படத்தில் ஏதோ மேஜிக் உள்ளது. படத்தை பார்த்தபின் நான் கார்த்தியிடமும் பேசினேன். மெய்யழகனைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், நான் மகிழ்ச்சியாக உணர்வேன்' என்றார்