அதீத வன்முறை... ‘மார்கோ' படத்திற்கு வந்த சிக்கல்

‘மார்கோ' படத்தை தொலைக்காட்சி & ஓடிடியில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹனீஃப் அதேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள படம் ‘மார்கோ’. இந்தப் படத்தில் சித்திக், ஜெகதீஷ், அபிமன்யூ திலகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் படத்துக்கு இசையமைத்துள்ளார். க்யூப்ஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. அதீத வன்முறை, ஆக்ஷனில் உருவான இப்படம் மலையாளத்தில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் மொத்தமாக ரூ.104 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது. உன்னி முகுந்தனுக்கு இது முக்கியமான படமாக அமைந்தது. இந்தப் படம் வரும் பிப்ரவரி 14-ம் தேதி சோனி லிவ் ஓடிடியில் வெளியானது.
The Central Board of Film Certification (CBFC) has denied television satellite rights for the Malayalam action thriller #Marco due to its extreme violence. pic.twitter.com/eAhmg2ISL1
— LetsCinema (@letscinema) March 5, 2025
ஆனால் தீவிர வன்முறை காரணமாக அதன் தொலைக்காட்சி சாட்டிலைட் உரிமையை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) மறுத்துள்ளது. இதனால், தற்போது ஓடிடியில் இருந்து இந்த படத்தை நீக்கவும் அரசு தரப்பில் இருந்து வேலை நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.