‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தை வரும் பிப்ரவரியில் வெளியிட திட்டம் என தகவல்!

nivin pauly

சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்து வரும் இயக்குனர் ராமின் ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திரைக்கு கொண்டு வர பட குழு திட்டமிட்டு வருகிறது.

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் ரசிகர்களிடையே தனி இடத்தைப் பிடித்துள்ள இயக்குனர் ராம், தற்போது ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தை இயக்கியுள்ளார். நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை பெறுவதன் மூலம் அதகளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. nivin

இயக்குனர் ராமின் மற்ற படங்களை போலவும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கேற்ப ஏற்கனவே வெளியான படத்தின் க்லிம்ஸ் காட்சிகளும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் எப்பொழுது துறைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் அடுத்தாண்டு பிப்ரவரியில் படத்தை வெளியிட பட குழு திட்டமிட்டு வருகின்றனர். 

இப்படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியின் மற்றொரு படமான பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படம் 2025ம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story