‘மாமன்னன்’-ல் இணையும் பகத் பாசில்... படப்பிடிப்பு குறித்து சூப்பர் அப்டேட் !
உதயநிதியின் ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களுக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர்களுடன் மலையாள நடிகர் பகத் பாசில், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. இந்த படத்தை உதயநிதியின் சொந்த நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வருகிறது. கடந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது இந்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படப்பிடிப்பு வரும் மே 13-ஆம் தேதி முதல் நடிகர் பகத் பாசில் இணையவுள்ளராம். அதன்பிறகு உதயநிதி மற்றும் பகத் பாசில் இணைந்து நடிக்கும் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.