மம்மூட்டி, மோகன்லாலுக்கு பிறகு ஃபஹத் ஃபாசில் சிறந்த நடிகர்: ஊர்வசி பாராட்டு
1726651726816
மம்மூட்டி, மோகன்லாலுக்குப் பிறகு சிறந்த மலையாள நடிகராக ஃபஹத் ஃபாசில் இருக்கிறார் என்று நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “மம்மூட்டி, மோகன்லால் இருவரும் மலையாள சினிமாவின் இரண்டு தூண்கள். அவர்கள் தங்கள் நடிப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக ஏற்கெனவே உச்சத்தைத் தொட்டு விட்டார்கள். அவர்களை விமர்சிக்க ஏதும் இல்லை. தற்போதைய காலகட்டத்தில் ஃபஹத் ஃபாசில் சிறந்த நடிகர் என்பதை எளிதாக அறிய முடியும். இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகராக அவர் மாறுவார் என்பதில் சந்தேகம் இல்லை. எந்த விதமான கதாபாத்திரத்திலும் அவரால் நடிக்க முடியும். அவரது கதாபாத்திர தேர்வும் தனித்துவமானது. ‘ஆவேஷம்’ படத்தில் ஆக்ஷன் பாத்திரத்தில் நடித்தபின் அவர் கேரக்டர் முழு வடிவத்துக்குள் வந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.