ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவான ‘மாரீசன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
1751761827000

வடிவேலு, ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவான மாரீசன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வடிவேலு, ஃபகத் ஃபாசில் இருவரும் மாரீசன் என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை மலையாள இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
அண்மையில், படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இப்படம் வருகிற ஜூலை 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.