புதிய படத்திற்காக கராத்தே பயிற்சி எடுக்கும் ஃபகத் ஃபாசில்

புதிய படத்திற்காக கராத்தே பயிற்சி எடுக்கும்  ஃபகத் ஃபாசில்

தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில்.. சிறந்த கலைஞர் எனப் போற்றப்படும் ஃபகத், 2002-ம் ஆண்டு தனது அப்பா ஃபாசில் இயக்கத்தில் நடிகராக அறிமுகமானார். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்து, தற்போது மலையாள சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார். வித்தியாசமான, எளிமையான கதைகள் பலவற்றில் தேர்ந்தெடுத்து நடித்து வருவதால், ஃபகத் பாசில் படமென்றாலே ஒரு எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் அவர், பெங்களூர் டேஸ் படத்திற்கு பிறகு தமிழிலும் அதிக ரசிகர்களைக் கவர்ந்து விட்டார். தமிழில் அவரது நடிப்பில் வெளியான விக்ரம் மற்றும் மாமன்னன் திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. 

புதிய படத்திற்காக கராத்தே பயிற்சி எடுக்கும்  ஃபகத் ஃபாசில்

தெலுங்கில் தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்தில் அவர் நடித்து வருகிறார். அவரது மாறுபட்ட நடிப்பில் மலையாளத்தில் ஆவேஷம் படம் உருவாகி இருக்கிறது. இந்நிலையில், கராத்தே சந்திரன் என்ற படத்திற்காக நடிகர் பகத், கராத்தே பயிற்சி எடுத்து வருகிறார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Share this story