மீண்டும் ரஜினியுடன் இணையும் ஃபகத் பாசில்... ?

rajini

ரஜினி நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் ஃபகத் பாசில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தமிழக – கேரளா எல்லையில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மிர்ணா ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார்.jailer 2

இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்டோர் நடிப்பார்களா என்ற கேள்வி நிலவி வந்த நிலையில், அண்மையில்,  ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கவிருப்பதை சிவராஜ்குமார் உறுதி செய்திருந்தார். இந்நிலையில்,  ‘ஜெயிலர் 2’ படத்தில் ஃபகத் பாசில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே ரஜினியுடன் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story