ஃபகத் பாசிலின் `பொகெயின்வில்லா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
1727685900000

மலையாள ரசிகர்களால் ஃபாஃபா என்று அன்புடன் அழைக்கப்படுபவர் ஃபகத் ஃபாசில். மலையாள சினிமா மட்டுமன்றி, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் மற்றும் தெலுங்கில் புஷ்பா உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார். அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் பொகெயின்வில்லா திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஃபகத்தின் நெருங்கிய நண்பரான அமல் நீரட் இயக்குகிறார். மலையாளத்தில் மமூட்டி நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான பீஷ்மா பர்வம் திரைப்படத்தை அமல் நீரட் இயக்கினார். இப்படத்தில் ஃபஹத் ஃபாசிலுடன் , குஞ்சாக்கோ போபன், வீணா நந்த குமார், ஜோதிர்மயி, ஸ்ரீண்டா, முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் நிறைந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனந்த சந்திரன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.