ரஜினியின் ‘வேட்டையன்’ ரிலீஸால் ஃபஹத் ஃபாசில் படம் தள்ளிவைப்பு

vettaiyan

ஃபஹத் பாசில் நடித்துள்ள ‘Bougainvillea’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் அதே நாளில் ரஜினியின் ‘வேட்டையன்’ படம் வெளியாக உள்ளதால் படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்களில் ஒருவரான ஃபஹத் ஃபாசில் மாற்றியுள்ளார்.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரஜினி, ராணா, ஃபஹத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் அக்டோபர் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், மலையாளத்தில் அக்டோபர் 10-ம் தேதி ‘Bougainvillea’ என்ற படம் வெளியாக திட்டமிட்டு விளம்பரப்படுத்தி வந்தார்கள்.


குஞ்சாக்கோ போபன், ஃபஹத் ஃபாசில், ஜோதிர்மயி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஜோதிர்மயி மற்றும் குஞ்சாக்கோ போபன் இணைந்து தயாரித்திருந்தார்கள். அமல் நீரத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஃபஹத் பாசிலும் தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் எனக் கூறப்படுகிறது. இதனால் ‘வேட்டையன்’ படத்துடன் வெளியிட வேண்டாம் என்று ஃபஹத் பாசில் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை ஏற்று அக்டோபர் 10-ம் தேதி வெளியீட்டை மாற்றி அக்டோபர் 17-ம் தேதி படத்தை வெளியிடுகிறது படக்குழு.

Share this story