மார்பிங் மூலம் போலி ஆபாச வீடியோ... நடிகை கிரண் போலீசில் புகார்..!

மார்பிங் மூலம் எடிட் செய்யப்பட்ட தனது போலி ஆபாச வீடியோக்களை இணையத்தில் பரப்பி வருவதாக சைபர் கிரைம் போலீசில் நடிகை கிரண் புகாரளித்துள்ளார்.
ஜெமினி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர், நடிகை கிரண். அதன் தொடர்ச்சியாக அன்பே சிவம், திருமலை, வின்னர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கனவுக் கன்னி இடத்தில் இடம்பிடித்தார். குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பின் பட வாய்ப்புகள் குறைந்து அம்மா, அக்கா உள்ளிட்ட ரோல்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் பட வாய்ப்பு முற்றிலும் குறைந்தது.
இந்நிலையில், மார்பிங் மூலம் தனது போலி ஆபாச வீடியோக்கள் பல சோசியல் மீடியாக்களில் பரவி வருவதாக அதிர்ச்சி தகவலைத் தெரிவித்து இருக்கிறார். அது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில், நடிகை கிரண் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது போலி ஆபாச வீடியோவை டவுன்லோட் மற்றும் ஷேர் செய்பவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிரண் கேட்டுக் கொண்டுள்ளார். அவரின் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் நடிகையின் போலி ஆபாச வீடியோக்களை பரப்பும் கும்பலுக்கு வலைவீசியுள்ளனர்.
அதில் சிக்கும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் யூடியூப் சேனலுக்காக கிரண் அளித்த பேட்டியில் பட வாய்ப்புக்காகப் பிரபல சினிமா நடிகர்கள் பலரும் தன்னை தவறான பாதைக்கு அழைக்க முயன்றதாகக் கூறி நடந்து கொள்ள முயன்றதாகப் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தற்போது தனது போலி ஆபாச வீடியோக்கள் பரவி வருவதாக நடிகை கிரண் புகாரளித்திருப்பது அவரது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.