முன்னணி நடிகரின் பெற்றோருக்கு 50-ஆம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டம்-பிரபலங்கள் வாழ்த்து.

photo

பெற்றோரின் 50 –ஆம் ஆண்டு திருமண நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர் ஜெயம் ரவி, மற்றும் இயக்குநர் மோகன் ராஜா.

photo

‘ஜெயம் டூ பொன்னியின் செல்வன்’ வரை  தனது எதார்த்தனான நடிப்பால் முன்னணி நடிகராக வலம் வருகிறார் ஜெயம் ரவி. அதே போன்று  அவரது சகோதரரும் இயக்குநருமான, மோகன் ராஜா தமிழில் ஜெயம் படத்தின் மூலமாக அறிமுகமாகி பின் எம். குமரன் சன் ஆஃப் மகாலெட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன், வேலைக்காரன என பல படங்களை இயக்கி ஹிட் கொடுத்துள்ளார்.


இந்த நிலையில் இன்று தங்களது பொற்றோரின் 50 –ஆம் ஆண்டு திருமண தினத்தை இருவரும் ஒன்று சேர்ந்து தங்கள் குடும்பத்தோடு 50-ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்கு திருமணம் நடந்த திருத்தணி கோவிலில் கொண்டாடி உள்ளனர். அதை தொடர்ந்து இருவருமே தங்கள் சமூக வலைதள பக்கத்தில் அந்த அழகிய தருணத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்து தாய் தந்தைக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


அந்த புகைப்படத்திற்கு பல ரசிகர்களும் ,சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

Share this story