சினிமாவில் இருந்து விலகும் நடிகர் நாசர் ... என்ன காரணம் தெரியுமா ?
சினிமாவிலிருந்து பிரபல நடிகரான நாசர் விலகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தென்னிந்தியாவில் பிரபல நடிகரான இருப்பவர் நடிகர் நாசர். பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘கல்யாண அகதிகள்’ படத்தின் மூலம் நடிகராக முதன்முதலில் வெள்ளித்திரையில் அடியெடித்து வைத்தார். இதையடுத்து கதாநாயகன், வில்லன், குணசித்திரம் என பல கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். கதாநாயகனை விட இவரின் வில்லன் கதாபாத்திரமே ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த தேவர் மகன், குருதிபுனல், பம்பாய் உள்ளிட்ட பல திரைப்படங்கள் இன்று வரை முத்திரை பதித்துள்ளன. இந்த படங்கள் மூலம் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார். சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல், இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் என பன்முக திறமைக் கொண்டு செயல்பட்டு வருகிறார். இதுதவிர நடிகர் சங்க தலைவராகவும் இரண்டாவது முறையாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சினிமாவில் இருந்து நடிகர் நாசர் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் நீண்ட நாட்களாக நாசர், இதய நோயால் அவதிப்பட்டு வருகிறார். அதிலும் கொரானா நேரத்தில் இந்த பாதிப்பு இன்னும் அதிகரித்துவிட்டதால் உடல் ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால் சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாசரின் இந்த முடிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.