Shocking : பிரபல நடிகர் மனோபாலா திடீர் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம்

manobala

 பிரபல நடிகரான மனோபாலா திடீரென மரணமடைந்துள்ளதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ‌ 

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருந்தவர் மனோபாலா. நீண்ட சினிமாவில் பணியாற்றி வந்த அவர், உதவி இயக்குனராக சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு பல முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளார். இதையடுத்து சூப்பர் ஹிட் சில படங்களை இயக்கினார். 

manobala

பன்முக திறமை கொண்ட அவர், தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என முப்பரிமாணங்களில் பணியாற்றியுள்ளார்.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் கவரும் வகையில் காமெடி கதாபாத்திரங்களில் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

manobala

இந்நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார். பின்னர் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் இன்று‌ காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் திடீர் மரணம் திரையுலகில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  ‌ 

Share this story