பிரபல நடிகரின் மனைவி கட்டிப்போட்டு கொள்ளை.. சென்னையில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு !

rk

சென்னையில் பிரபல நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து பிரபலமானவர் ஆர்.கே என்கிற ராதாகிருஷ்ணன். இவர் நடித்த அழகர் மலை, வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வாய்ப்பு இல்லாததால் தனது சொந்த தொழிலை கவனித்து வருகிறார். 

சென்னை நந்தம்பாக்கத்தில் மனைவியுடன் வசித்து வரும் ஆர்.கே. தொழில் ரீதியாக அடிக்கடி வெளியே செல்வது வழக்கம். அப்படி ஆர்.கே இல்லாத நேரத்தில் அவரது மனைவியை கட்டிப்போட்டு விட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். இந்த கொள்ளையில் 200 பவுன் நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

இந்த கொள்ளை குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு வீட்டில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அடை மழை பெய்யும் இந்த நேரத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Share this story