சோகத்தில் திரையுலகம்: பிரபல காமெடி நடிகர் ‘ஆர் எஸ் சிவாஜி’ காலமானார்.

photo

கோலிவுட்டில் பிரபல காமெடி நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் வலம் வந்த ஆர் எஸ் சிவாஜி இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 67.

photo

பிரபல நடிகரும் தயாரிப்பளருமான எம்.ஆர் சந்தானத்தின் மகன் ஆர்.எஸ் சிவாஜி. சந்தானம், சிவாஜி மீதுகொண்ட அன்பால் தனது மகனுக்கு அதே பெயரை சூட்டினார். கோலிவுட்டில் ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர் ஆர் எஸ் சிவாஜி. தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். அதிலும் இவர் பேசிய ‘தெய்வமே நீங்க எங்கயோ போய்டீங்க..’ என்ற வசனம் அவரை மேலும் பிரபலமாகியது.

photo

குறிப்பாக சிவாஜி, கமல்ஹாசனின் ஆஸ்தான நடிகர், அவருடன் இணைந்து அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராசர்,சத்யா, குணா, மகளிர் மட்டும், அன்பே சிவம், விருமாண்டி  உள்ளிட்ட பல  படங்களில் நடத்துள்ளார். சமீபத்தில் கூட சாய்பல்லவியின் ‘கார்கி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து நல்ல பாராட்டுகளை பெற்றார். ஆர்.எஸ் சிவாஜி கடைசியாக நடித்தது யோகிபாபுவின் ‘லக்கிமேன்’ இந்த படம் நேற்றி வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திரைத்துறையை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this story