நடிகர் சரத் பாபு மரணமடைந்ததாக வதந்தி.. மறுக்கும் உறவினர்கள் !

sarath babu

 பிரபல நடிகராக சரத் பாபு உடல் நலக்குறைவால் காலமானதாக சமூக வலைத்தளத்தில் வதந்தி பரவி வருகிறது. 

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சரத் பாபு. தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து  நடித்துள்ளார். சினிமாவில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர். 80-களில் முன்னணி நடிகராக இருந்த அவர், இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘பட்டின பிரவேசம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 

sarath babu

சுமார் 40 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் அவர், சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். அண்ணாமலை, முத்து ஆகிய படங்களில் ரஜினியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தள்ளார். சமீபத்தில் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான ‘வசந்தமுல்லை’ படத்தில் கடைசியாக அவர் நடித்தார்.  

71 வயதாகும் அவர் ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர். சமீபத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பெங்களுரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நிலை தேறி வந்தார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். ஐ‌சியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் அவர் காலமானதாக சமூக வலைத்தளத்தில் வதந்தி பரவி வந்ததது. ஆனால் இதை அவரது உறவினர்கள் மறுத்துள்ளனர். 

Share this story