கவலைக்கிடமான நிலையில் நடிகர் சரத்பாபு... தொடர் பிரார்த்தனையில் ரசிகர்கள் !

sarathbabu

பிரபல நடிகரான சரத்பாபுவின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து  நடித்துள்ளவர் சரத்பாபு. 80-களில் முன்னணி நடிகராக வலம் வந்த அவர்,  தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்றார்.

sarathbabu

ஆந்திராவை சேர்ந்த அவர் ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார். சமீபத்தில் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பெங்களுரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நேற்று அவரது உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

ஐ‌சியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தற்போதைய தகவல்படி அவரின் உடல் பாகங்கள் அடுத்தடுத்து செயலிழந்து வருவதாகவும், அதனால் அவர் வென்டிலேட்டரிஷ் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.  

 

Share this story