பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்... திரையுலகினர் அஞ்சலி !

suresh Krishna

பிரபல நடிகரான சரத்பாபு உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 

தென்னிந்தியாவில் பிரபல நடிகராக இருந்தவர் சரத்பாபு. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 

suresh Krishna

குறிப்பாக நடிகர் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் திரைப்படங்களான. வேலைக்காரன், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த அவர் சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். 71 வரதாகும் அவர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். 

இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐ‌சியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட அவர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று நடிகர் சரத் பாபு உயிரிழந்தார். இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் தி.நகரில் உள்ள வீட்டில் வைக்கப்படுகிறது. அவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Share this story