பெயரை மாற்றிய பிரபல நடிகரின் மகன்...!

gautam karthik

பிரபல நடிகர் ஒருவர் தனது பெயரை மாற்றியுள்ளார். 


தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று அன்று முதல் இன்று வரை கொண்டாடப்படும் நடிகர் கார்த்திக். இவரது மகன்தான் கௌதம் கார்த்திக் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர் ரங்கூன், தேவராட்டம் என பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் மீண்டும் மணிரத்துனத்துடன் கூட்டணி அமைத்து தக் லைஃப் திரைப்படத்தில் கமல்ஹாசன், சிம்புவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

gautam karthik

 

மேலும் இவர் ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க எஃப் ஐ ஆர் பட இயக்குனர் மனு ஆனந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் ஆர்யா, கௌதம் கார்த்திக் தவிர சரத்குமார், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

karthik

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று (பிப்ரவரி 22) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு போஸ்டரில் தான் நடிகர் கௌதம் கார்த்திக்கின் பெயர், கௌதம் ராம் கார்த்திக் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நடிகர் ரவியை தொடர்ந்து கௌதம் கார்த்திக் தனது பெயரை மாற்றியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.


 

Share this story