சன்பிக்சர்ஸ் வெளியிட்ட ‘ஜெய்லர்’ பட அப்டேட் – படப்பிடிப்பில் கலந்துகொண்ட முக்கிய நடிகை.

photo

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அட்டகாசமான தயாராகிவரும் திரைப்படம் ‘ஜெய்லர்’ இந்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கிவருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு மற்றும் விநாயகன் ஆகிய நான்கு நட்சத்திரங்கள் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்பில் முன்னணி நடிகையான தமன்னா இணைந்துள்ளதாக தயாரிப்புநிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

photo

தமன்னா இந்த படத்தில் நடிப்பாதாக முன்னர் தகவல் பரவியநிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் தமன்னா மிரட்டலான வகையில் காட்சிக்கொடுக்கிறார், மேலும் தமன்னா சூட்டிங்கில் இணைந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். தொடர்ந்து தமன்னா இந்த படத்தில் பிளாஸ் பேக் காட்சிகளில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னர் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாக படத்தில் சூப்பர் ஸ்டாரின் பெயர் முத்து பாண்டியன் என குறிப்பிடப்பட்டிருந்தது.  இவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. விரைவில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

photo


Share this story