பிரபல நடிகை டூ வைல்ட் லைஃப் போட்டோகிராபர்..!

1
2003 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை சதா. இந்தப் படம் தெலுங்கில் வெளியான ஜெயம் படத்தின் ரீமேக்  ஆகும். இதைத் தொடர்ந்து வர்ணஜாலம், எதிரி, பிரியசகி, உன்னாலே உன்னாலே, அன்னியன், திருப்பதி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சதா தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். இவ்வாறு பிசியாக வலம் வந்த நடிகை சதா சமீர் காலமாகவே சினிமாவிலிருந்து விலகி இருக்கின்றார்.

இந்த நிலையில், நடிகை சதா பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.அதாவது, நடிகை சதா முழு நேரமாகவே "வைல்ட் லைஃப்" போட்டோகிராபராக மாறிவிட்டாராம். இது தொடர்பான வீடியோக்களும்  புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன.


 

Share this story