90-களின் பேவரைட் தொகுப்பாளர், சிந்துபாத் நடிகர் திடீர் மறைவு... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

ananda-kanna-4

பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலமாகியுள்ளார்.

சன் மியூசிக் தொடங்கிய காலகட்டத்தில் தொகுப்பாளராக இருந்த ஆனந்த கண்ணன் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அவர் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். சிந்துபாத் தொடரில் அவரது கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேவரைட் ஆக இருந்து வருகிறது. 90-களின் மக்கள் மனம் கவர்ந்த தொகுப்பாளராகவும் இருந்தார். 

anandha kannan

நீண்ட நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆனந்த கண்ணன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.  இயக்குனர் வெங்கட் பிரபு அவரது மறைவு செய்தியை வெளியிட்டுள்ளார். "சிறந்த நண்பன், சிறந்த மனிதன் தற்போது இல்லை. அவருக்கு என்னுடைய ஆழந்த இரங்கல்" என்று தெரிவித்துள்ளார். மேலும் அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


 

Share this story