அடுத்தடுத்த போட்டோஷூட்டுகளால் தெறிக்கவிடும் மயில்சாமி

அடுத்தடுத்த போட்டோஷூட்டுகளை வெளியிட்டு ரசிகர்களை தெறிக்கவிடுகிறார் மயில்சாமி.
தமிழ் திரையுலகில் காமெடியில் தனக்கென இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நடிகர் மயில்சாமி. தனது காமெடி மூலம் ரசிகர்களை கவர்ந்து இவர், பல முன்னணி ஹீரோக்களோடு நடித்துள்ளார். பன்முக திறமைக் கொண்ட இவர், பல குரல்களில் பேசுவதிலும் வல்லவர். சினிமாவை தவிர டிவி நிகழ்ச்சிகளில் தொப்பாளராக பணியாற்றியுள்ளார். திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களோடு குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
கன்னி ராசி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், நகைச்சுவைக்கென்று தனி பாணியையே கடைப்பிடித்து வருகிறார். தமிழில் 80-களில் புகழ்பெற்ற ரஜினி, கமல் முதல் தற்போது உள்ள அஜித், விஜய், விக்ரம், விஷால், சந்தானம், சிவகார்த்திகேயன் வரை பல ஹீரோக்களோடு நடித்து வருகிறார்.
பெரிய நடிகர்களாக வடிவேலு, விவேக் போன்றவர்களோடு இணைந்து காமெடியில் கலக்கி வருகிறார். சினிமாவோடு சமூக நலனிலும் அக்கறை கொண்டவராக இருக்கிறார் மயில்சாமி. அண்மையில்தான் மிரட்டும் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ஆதரவை பெற்றார். இந்நிலையில் அதேபோன்றொரு புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது.