டூரிஸ்ட் பேமிலி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்...!

sasi

டூரிஸ்ட் பேமிலி படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமான  ஜியோ ஹாட்ஸ்டார் கைப்பற்ற                                           

சசிகுமார், சிம்ரன், யோகிபாபு நடித்து, அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் மே 01 அன்று திரையரங்கில் வெளியாகி உள்ள படம் டூரிஸ்ட் பேமிலி. விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. கருடன், நந்தன் படங்களை தொடர்ந்து இந்த படத்தின் மூலம் ஹாட்ரிக் வரவேற்பை பெற்றுள்ளார் சசிகுமார். இந்த திரைப்படம் தற்போது வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ssi

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் சுமார் 13 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த திரைப்படம் மே இறுதி வாரத்தில் இந்த ஓடிடி தளத்தில் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story