பிரபல வசனகர்த்தா ஆரூஸ்தாஸ் மரணம்... திரையுலகினர் அஞ்சலி !

arurdass

பிரபல வசனகர்த்தாவான ஆருர்தாஸ் வயதுமூப்பு  காரணமாக நேற்று மாலை மரணமடைந்தார். 

தமிழ் சினிமாவின் பிரபல வசனகர்த்தாவாக இருந்தவர் ஆரூஸ்தாஸ். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல நடிகர்களின் சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றியவர். சிவாஜி நடிப்பில் மாபெரும் பெற்ற பாசமலர், பார் மகளே பார், இருமலர்கள், படித்தால் மட்டும் போதுமா, பார்த்தால் பசி தீரும், புதிய பறவை, இரு மலர்கள், தெய்வமகன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் பயணித்துள்ளார். 

arurdass

அதேபோன்று எம்.ஜி.ஆர் நடித்த தாய் சொல்லைத் தட்டாதே, குடும்பத்தலைவன், நீதிக்குப்பின் பாசம், தொழிலாளி, தாய்க்கு தலைமகன், பெற்றால்தான் பிள்ளையா வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார். ஜெமினி கணேசன் நடித்த வாழ வைத்த தெய்வம், திருமகள், சவுபாக்கியவதி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 

உணர்ப்பூர்வமான இவரது வசனங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. 91 வயதாகும் ஆரூர்தாஸ், சென்னை தி.நகரில் உள்ள நாதமுனி தெருவில் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக நேற்று மாலை 6.40 மணிக்கு மரணமடைந்தார். தற்போது அஞ்சலிக்காக அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகை சார்ந்த ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலினும் ஆரூர்தாஸுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இறுதி சடங்குகள் இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.‌

 

 

Share this story