பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு கைதா ?... இணையத்தில் தீயாய் பரவும் தகவல் !

Venkat Prabhu

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.‌

வெங்கட் பிரபு திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சென்னை -28 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.  இதையடுத்து சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. அதன்பிறகு குறுகிய கால படைப்பாக ‘மன்மதலீலை’ படத்தை இயக்கி, அந்த படத்தை வெற்றிப்படமாக மாற்றினார். 

Venkat Prabhu

தற்போது நாகசைதன்யாவை வைத்து 'கஸ்டடி' படத்தை இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இது உண்மையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேநேரம் இது படத்தின் ப்ரோமோஷனுக்காக செய்யப்பட்டது எனவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. 

 

Share this story