'ஜனநாயகன்' படத்தில் கேமியோ ரோலில் பிரபல இயக்குனர்கள்?

vijay

நடிகர் விஜய்யின் கடைசி படமான 'ஜன நாயகன்' படத்தில் கேமியோ ரோலில் பிரபல இயக்குனர்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், தனது கடைசி படமான  69-வது படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'ஜன நாயகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகவுள்ளது.  

vijay
இந்த படமானது அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகின. மேலும் இப்படத்தின் முழு படப்பிடிப்பு ஜூன் மாத இறுதிக்குள் நிறைவு பெறும் எனவும் தகவல் வெளியானது. இந்நிலையில்,  'ஜன நாயகன்' படத்தில் இயக்குனர்கள் அட்லீ, நெல்சன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 


 

Share this story