கின்னஸ் சாதனை படைத்த, பிரபல 'ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னம்' காலமானார்.

photo

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் பிரபல மற்றும் மூத்த ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய ஜூடோ கே. கே ரத்னம், வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருக்கு வயது 93.

photo

ரஜினி, கமல், விஜய், ஜெய்சங்கர் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தவர் ஜூடோ ரத்னம். இவர் கடந்த 1966ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான ‘வல்லவன் ஒருவன்’ படத்தின் மூலமாக ஸ்டண்ட் மாஸ்டரான அறிமுகமானார். தொடர்ந்து முத்து சிற்பி, தரிசனம், எதிரிகள் ஜாக்கிரதை, தங்க கோபுரம், காயத்ரி, முத்துகாளை, நெற்றுகண், சகலகலா வல்லவன் போன்ற படங்களில் பணியாறியுள்ளார்.

photo

தமிழ் மொழியை கடந்து தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் பனியாற்றியுள்ளார். ஸ்டண்ட் மட்டுமல்லாது சில படங்களிலும் நடித்தும், ‘ஒத்தையடி பாதையிலே’  எனும் படத்தை தயாரித்தும் உள்ளார். முக்கியமாக சுமார் 1200 படங்களுக்கு மேல் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

photo

ஜூடோ ரத்னம் கடந்த சில வருடங்களாகவே உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று இயற்கை எய்தினார். இந்த தகவலால் திரையினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Share this story