‘AK62’ படத்திலிருந்து விலகிய முக்கிய நடிகர்- வில்லனாக களமிறங்க போகும் பிரபல ஹீரோ!

photo

அஜித் குமார் நடிக்க உள்ள அவரின் 62வது திரைப்படத்தின் வில்லனாக பிரபல நடிகர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

கடந்த சில மாதங்களாக ‘AK62’ திரைப்படம் குறித்து சமூக வலைதளத்தில் அதிகமான செய்திகள் வெளியான வண்ணம் இருந்து. அதற்கு காரணம் அந்த படத்தை, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் கூறிய கதை அப்படத்தயாரிப்பு நிறுவனமான லைக்கா மற்றும் அஜித்திற்கு திருப்தியளிக்காத நிலையில் படத்தின் இயக்குநரை மாற்றி அவருக்கு பதில் ‘தடம், கலகத்தலைவன்’ படங்களின் இயக்குனரான மகிழ்திருமேனியை  உறுதிபடுத்தினர்.

photo

 தொடர்ந்து படத்தின் இசையமைப்பாளரான அனிருத்தும் மாற்றப்பட்டு சந்தோஷ் நாராயணன் உறுதிபடுத்தப்பட்டார். இந்த நிலையில் அஜித்திற்கு வில்லனாக அருண்விஜய் நடிப்பார் என செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவரும் விலகியுள்ளாராம், அதாவது அருண்விஜய், இயக்குனர் பாலாவின் 'வணங்கான்' திரைப்படத்தில் சூர்யாவுக்கு மாற்றாக ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 9ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. படப்பிடிப்பு முடியும் வரை அருண்விஜய் தனது கெட்டப்பை மாற்ற முடியாது என்பதால், 'ஏகே 62' படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறதுஅஜித்தின்  ‘AK62’ திரைப்படத்தின் பூஜை சத்தமே இல்லாமல் மிக எளிமையாக நடந்து  முடிந்த நிலையில், விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்தால் மட்டுமே எந்த தகவல் உண்மை என தெரியவரும்.



 

Share this story