புகழ்பெற்ற கோவிலுக்கு செல்ல அனுமதி மறுப்பு ?... ஆதங்கத்தை வெளிப்படுத்திய அமலா பால் !

amala paul

பிரபல கோவிலில் சாமி தரிசனம் செய்ய தனக்கு அனுமதி மறுத்ததாக நடிகை அமலா பால் குற்றம் சாட்டியுள்ளார். 

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் அமலாபால். மலையாள நடிகையான அவர், தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் நடித்து வருகிறார். தற்போது கேரளாவில் உள்ள தனது சொந்த ஊரில் வசித்து வரும் அமலா பால், அங்குள்ள உள்ள பிரசித்தி பெற்ற திருவைராணிகுளம் மகாதேவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றார். 

amala paul

அந்தக் கோவிலில் பிற மதத்தினருக்கு அனுமதியில்லாத நிலையில் அமலாபாலை கோயில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால் வெளியில் இருந்தபடியே சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து தனது ஆதங்கத்தை நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார். 

amala paul

அதில் நான் கோவிலுக்கு வெளியே நின்றே சாமி தரிசனம் செய்தேன். 2023-ஆம் ஆண்டும் மத பாகுபாடு காட்டுவது வருத்தம் அளிக்கிறது. இந்த நிலை மாறும் என நான் நம்புகிறேன். மக்களை மனிதர்களாக மதிக்கும் காலம் வரும் என்று அமலாபால் தெரிவித்துள்ளார். இதற்கிடையே வழக்கமாக கடைபிடிக்கும் நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது. அதனால் அமலா பாலை அனுமதிக்கவில்லை என்பது தவறானது என கோயில் நிர்வாகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

Share this story