ஹன்சிகாவின் திருமண ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றிய பிரபல ஓடிடி….

photo

ஹன்சிகா திருமணத்தின் ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சின்ன குஷ்பூ என ரசிகர்காளால் அழைக்கப்படும் நடிகை ஹன்சிகாவிற்கு திருமணம் என சமீபத்தில் தகவல் வெளியானது. அதாவது நடிகை ஹன்சிகா தனது நீண்ட நாள் நண்பரான சோஹைல் கதுரியவை டிசம்பர் 4ந் தேதி திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும். இதற்காக புகழ்பெற்ற 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் கோட்டை மற்றும் அரண்மனை தயாராகி வருவதாகவும் சொல்லப்பட்டது.

photo

அதை தொடர்ந்து ஹன்சிகா குறித்தும் , அவரது  மாப்பிள்ளையின் முந்தய திருமணம் குறித்தும் பல சர்ச்சைகள் உலா வந்தது. ஆனால் அவற்றைப்பற்றி ஹன்சிகா கவலைப்பட்டதாக தெரியவில்லை.

photo

இந்த நிலையில் ஹன்சிகாவின் திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் விக்கி-நயன் திருமணத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

photo

Share this story