அந்த 10 நிமிடம் நொறுங்கிவிட்டேன்... விபத்தில் சிக்கிய பிரபல பின்னணி பாடகி ட்வீட் !

singer rakshita suresh

பிரபல பின்னணி பாடகி ரக்சிதா சுரேஷ் கார் விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தென்னிந்தியாவில் பிரபல பின்னணி பாடகியாக இருப்பவர் ரக்சிதா சுரேஷ். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். ஆறாவது சீசனில் ரன்னராக அறிவிக்கப்பட்ட அவருக்கு வாய்ப்புகள் குவிந்தனர். அதனால் தமிழை தவிர, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தனது இனிமையான குரலால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

singer rakshita suresh

சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் சொல் பாடலை பாடி அசத்தியுள்ளார். அதேபோன்று ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் காலத்துக்கு நீ வேணும் பாடலையும் பாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இது வெளிநாடுகளில் பல இசை நிகழ்ச்சியில் பாடி அசத்தி வருகிறார். 

அந்த வகையில் மலேசியாவில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றபோது அவரின் கார் விபத்தில் சிக்கியது. ஏர் பேக் இருந்ததால் சிறிய காயங்களுடன் அவர் உயிர் தப்பியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள அவர், ஒரு மிகப்பெரிய விபத்தில் இன்று சிக்கினேன். என்னுடைய கார் சாலையில் இருந்த டிவைடரில் மோதி கடும் சேதமடைந்தது. அந்த 10 நொடி என்னுடைய ஒட்டுமொத்த வாழ்வும் என் கண்முன்னே தோன்றி மறைந்தது. நல்லவேளையான நான் சிறிய உள்காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன் என்று கூறியுள்ளார். 

 

 

 

Share this story