பிரபல சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. சன் டிவி பிரபலத்தை கைப்பிடிக்கிறார்..!

1

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பாரதி கண்ணம்மா’ என்ற சீரியலில் பாரதியின் தங்கை அஞ்சலி கேரக்டரில் நடித்திருந்தவர் நடிகை கண்மணி மனோகரன். இவர் திடீரென இந்த சீரியல் இருந்து விலகி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ’அமுதாவும் அன்னபூரணி’ என்ற சீரியலில் நாயகி ஆக நடித்தார் என்பதும் இந்த சீரியலும் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் வேறு எந்த சீரியலிலும் அவர் கமிட்டாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கண்மணி மனோகரன் மற்றும் சன் டிவியில் தொகுப்பாளராக பணிபுரியும் அஷ்வத் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது இரு தரப்பின் பெற்றோர் சம்பந்தத்துடன் நேற்று திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

இது குறித்து அஸ்வத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு ’நான் தான் இங்கே விசிறி’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளதை அடுத்து இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Share this story