'காற்றில் கலந்த கானக்குயில்' - இறுதி மரியாதையுடன் உடல் தகனம் !

vanijayaram

பிரபல பாடகி வாணி ஜெயராமனின் உடல் போலீசாரின் இறுதி மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்தியாவில் உள்ள பல மொழி ரசிகர்களை கவர்ந்த பாடகியாக இருந்தவர் வாணி ஜெயராம். தனது காந்தக் குரலால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 10,000 மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழில் ஆரம்பித்த அவரின் பயணம் தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் தொடர்ந்தது. மூன்று முறை தேசிய விருதுகளையும் பல மாநில மொழி விருதுகளையும் பெற்று சாதனையாளராக இருந்து வந்தார். 

vanijayaram

 78 வயதாகும் அவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வசித்த வந்தார். இந்நிலையில் வீட்டில் நடந்து சென்ற போது கால் தவறி விழுந்து மரணமடைந்ததாக நேற்று தகவல் வெளியானது. இதையடுத்து இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

vanijayaram

இதேபோன்று அரசியல் பிரபலங்களும், திரையுலகை சார்ந்த பிரபலங்களும் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மதியம் 1.30 மணிக்கு வீட்டிலிருந்து வாகனம் மூலம் இறுதி பெசண்ட் நகர் மின் மயானத்திற்கு உடல் எடுத்து செல்லப்பட்டது. அங்கு காவல்துறையினர் 30 குண்டுகள் முழுங்க இறுதி மரியாதை செலுத்தினர். கடைசியாக கண்ணீருடன் வாணி ஜெயராமின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவர் நம்மை விட்டு பிரிந்தாலும் பாடல்களால் நம்மோடு வாழ்ந்துக் கொண்டிருப்பார் என்பதுதான் நிதர்சனம். 

 

Share this story