மாதவன் படத்தில் இணைந்த பிரபல கதாசிரியர்.. மித்ரன் ஜவஹர் படத்தின் புதிய அப்டேட்

madhavan

மித்ரன் ஜவஹர் மற்றும் மாதவன் கூட்டணியில் உருவாகும் படத்தில் பிரபல கதாசிரியர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குனர் மித்ரன் ஜவஹரின் படைப்புகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே அவர் இயக்கத்தில் வெளியான யாராடி நீ மோகினி, குட்டி, உத்தமப்புத்திரன், மதில், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. 

madhavan

இந்த படங்களின் வெற்றிக்கு பிறகு ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் நடிகர் மாதவன் கதாநாயகனாக நடிக்கிறார். மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகவுள்ளது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 

madhavan

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு கதாசிரியராக ஜெயமோகன் பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றிப்பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு ஜெயமோகன் தான் கதாசிரியராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story