பிரபல குணச்சித்திர நடிகரும் இயக்குனருமான ஆர்என்ஆர் மனோகர் காலமானார்!
பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர்என்ஆர் மனோகர் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 61.
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் ஆர் என் ஆர் மனோகர். அவர் நடிகர் மட்டும் அல்ல. பல படங்களுக்கு எழுத்தாளராகவும் இரு படங்களை இயக்கவும் செய்துள்ளார்.

மைந்தன், கோலங்கள், புதுமைப்பித்தன், தென்னவன், புன்னகைப்பூவே, வந்தே மாதரம் ஆகிய படங்களுக்கு எழுத்தாளராகவும் மாசிலாமணி, வேலூர் மாவட்டம் என்ற இரு படங்களை இயக்கவும் செய்துள்ளார்.
மேலும் தமிழில் வீரம், என்னை அறிந்தால், சலீம், விஸ்வாசம், காப்பான், பூமி உள்ளிட்ட பல படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். தற்போது 61 வயதாகும் இவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சென்னையில் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அவருடைய மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் திரையுலக பிரபலங்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

