மார்க் ஆண்டனியை கொண்டாடும் ரசிகர்கள்.....கருப்பண்ண சாமி கோயிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம்....
மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா கருப்பண்ண சாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் ரிது வர்மா, சுனில், செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, அபிநாய உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் கடந்த 15-ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளில் மட்டும் 9 கோடி ரூபாய் வரை இப்படம் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் கருப்பண்ணசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
nullThank U 🙏
— Vishal Film Factory (@VffVishal) September 16, 2023
-@VishalKOfficial pic.twitter.com/V0VottWqVl